×

ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வியுற்றது மும்பை இந்தியன்ஸ்: பிளேஆப் வாய்ப்பு யாருக்கு?

ஷார்ஜா: மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். 2021 தொடரின் 46வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று பிற்பகல் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மும்பை அணியால் 129 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டெல்லி அணியில் அக்சார் பட்டேல், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து,130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களும் நேர்த்தியான வகையில் பந்து வீசினர். இதனால் டெல்லி அணி தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா (6), தவான் (6), ஸ்டீவ் ஸ்மித் (9) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த கேப்டன் ரிஷாப் பண்ட் 22 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் நிலைத்து நின்று ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அக்சார் பட்டேல் 9 ரன்னிலும் வெளியேறினாலும் ஹெட்மையர் 8 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஸ்கோர் உயர்வுக்கு சற்று காரணமாக இருந்தார்.

டெல்லி கேப்பிடல்ஸ் 13.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திற்கும்போது ஷ்ரேயாஸ் அய்யர் உடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். அஷ்வின் ஒருபக்கம் பந்துக்கு பந்து ரன்கள் அடிக்க 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை அணி தோல்வியடைந்ததால் பிளேஆப் வாய்ப்பு மங்கியுள்ளது. இதனையடுத்து தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. ரன் ரேட் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் அணிகள் வென்றாலும் அதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதனால் தான் யாருக்கும் சாதகமாக அமையகூடாது என்பதால் கடைசி 2 லீக்போட்டிகளும் 8ம்தேதி ஒரே நேரத்தில் (இரவு 7.30 மணி) தொடங்கி நடத்தப்பட உள்ளது.


Tags : IPL 2021 ,Delly Cappiles ,Mumbai Indians , IPL
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!.