×

உளுந்தூர்பேட்டை முதல் தலைவாசல் வரை சாலையின் நடுவே போலாட் பொருத்தம்: கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை முதல் சேலம் மாவட்டம் தலைவாசல் வரை உள்ள என்எச்- 79 சாலையில் தியாகதுருகம் அருகில் உள்ள இருவழிச்சாலையில் சாலை விபத்து தடுக்கும் விதமாக சாலையின் மத்தியில் பொருத்தப்பட்டுள்ள போலாட்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதந்தோறும் சாலை பாதுகாப்பு கூட்டம் நடத்தப்பட்டு சாலை விபத்துகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.    

மேலும் செப்டம்பர் 2021ம் மாதம் நடத்தப்பட்ட சாலைபாதுகாப்பு கூட்டத்தில் தியாகதுருகம் அருகில் உள்ள இருவழிச்சாலையில் சாலை விபத்து ஏற்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த இடத்தில் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக சாலையின் மத்தியில் போலாட் பொருத்த தேசிய போக்குவரத்து ஆணைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை முதல் தலைவாசல் வரை உள்ள என்எச்- 79 சாலையில் தியாகதுருகம் அருகில் இருவழிச்சாலையில் சாலை விபத்தை தடுக்கும் வகையில் தேசிய சாலை போக்குவரத்து ஆணையம் மூலம் சுமார் ரூ.2.21 லட்சம் செலவில்  சாலையின் மத்தியில் 18 மீட்டருக்கு ஒன்று வீதம் 3 கிமீ. தூரத்திற்கு 170 போலாட்கள் பொருத்தப்பட்டது. சாலை விபத்து ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து விதமான சாலை பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த தக்க நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Tags : Polot ,Inunturpate , Ulundurpet, Road, Kallakurichi Collector, Inspection
× RELATED உளுந்தூர்பேட்டையில் விநாயகர்...