×

உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் 11 அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் 11 அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தல்கள் மற்றும் 28 மாவட்டங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த 9 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு தமிழநாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள கீழ்காணும் 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1. ஆதார் அட்டை

2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை

3. புகைப்படத்துடன் கூடிய வங்கி/ அஞ்சலக கனக்குப் புத்தகங்கள்

4. தொழிலாளர் னால அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு

5. ஓட்டுநர் உரிமம்

6. நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD)

7. தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு

8. இந்திய கடவுச்சீட்டு(Indian Passport)

9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10. மத்திய/ மாநில அரசு, மத்திய/மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

11. பாராளுமன்ற/ சட்டமன்ற/ சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதும் ஒன்று இருந்தால் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu Electoral Commission , Voters can cast their vote by showing any of the 11 identity cards in the local body elections: Tamil Nadu Election Commission announcement ..!
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 29...