முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா மறைவுச் செய்தி மிகவும் கவலை அளிக்கிறது: ஜி.கே.வாசன் இரங்கல்..!

சென்னை: வீரபாண்டி ராஜா மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா அவர்களின் மறைவுச் செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. தமிழக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா அவர்கள் தந்தை வழியில் கழகப் பணி ஆற்றியவர். கழகத்தின் வளர்ச்சிக்காக தனது பங்களிப்பை சிறப்பாக மேற்கொண்டவர்.

குறிப்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தான் சார்ந்திருந்த தொகுதியின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். தி.மு.க வில் தேர்தல் பணிக்குழு செயலாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.வீரபாண்டி ராஜா அவர்களின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.க விற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தி.மு.க வினருக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More