பிரச்னைக்குரிய இடங்களில் விசாரிக்க செல்லும்போது உண்மையை படம்பிடித்து காட்டும் காலர் கேமராக்கள்: வேலூரில் 18 போலீசாருக்கு வழங்கல்

வேலூர்: தமிழகத்தில் சாலைமறியல், ஆர்பாட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகளின் போது அங்கு முதலில் காவலர்கள் சென்று பாதுகாப்பு கொடுப்பதோடு, சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். அதோடு, அப்பகுதியை அமைதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். இதுபோன்ற சமயங்களில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார் சில இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாவதும், போலீசார் பிரச்னைக்குரிய நபர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதில் உண்மை நிலை சில நேரங்களில் மறைக்கப்படுகிறது. எனவே, ஆர்பாட்டம், சாலை மறியல், வாகன சோதனை உள்ளிட்ட பிரச்னைகளின் போது, சம்பவ இடத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் படம் பிடித்து காட்டும் விதமாக காலர் கேமரா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கேமரா முதன் முதலாக சென்னை, கோவை போலீசாருக்கு வழங்கப்பட்டது. இந்த கேமராக்களை போலீசார் தங்களது தோள்பட்டையில் பொருத்திக்கொண்டு பிரச்னைக்குரிய இடங்களில் சென்று வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தும்போது, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் உண்மை மாறாமல் படம் பிடித்துக்கொள்ளும்.

இந்த காலர் கேமராவின் சிறப்பு, பதிவு ெசய்துவிட்டால் அதனை அழிக்க முடியாது. வேலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு, வேலூர் தாலுகா, விரிஞ்சிபுரம், காட்பாடி, விருதம்பட்டு, குடியாத்தம் ஆகிய காவல்நிலையங்களுக்கு 18 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் காலர் ேகமராக வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து காவல்நிலையங்களுக்கும் வழங்கப்படும். இந்த கேமராக்கள் முழு அளவில் நடைமுறைக்கு வந்துவிட்டால், போலீசாருக்கும் எந்த பிரச்னையும் இருக்காது. அதோடு காலர் கேமராவைப் பொருத்திக் கொண்டு லஞ்சம் வாங்குவதோ, அதற்காக பேரம் பேசுவதோ இனி இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>