×

கோவிட் ஹெல்ப்லைனில் மற்றவருக்கு உதவிய என்னுடைய மாணவனையும் இந்த கொரோனா விடவில்லையே!.. கல்லூரி முதல்வரின் உருக்கமான கண்ணீர் பதிவு

கோட்டா: கோவிட் ஹெல்ப்லைனில் மற்றவருக்கு உதவிய என் மாணவனையும் இந்த கொரோனா விடவில்லையே என்று கல்லூரி முதல்வர் தனது உருக்கமான கண்ணீர் பதிவை வெளியிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாணவர் சத்யம் ஷா என்பவர், கடந்த 25ம் தேதி கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். இவரது மறைவு குறித்து கல்லூரி முதல்வர் ஜான் வர்கீஸ் தனது இரங்கல் குறிப்பை கல்லூரியின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனாவின் இரண்டாவது அலை முற்றிலும் இதயமற்றது. மருந்து தயாரிப்பு மற்றும் உற்பத்தியில் முன்னணியில் நாடுகளில் நமது நாடும் ஒன்றாகும். நம்முடைய நாகரிகம், வாழ்க்கையை மிக உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறது. ஆனால், அந்த வாழ்க்கை இல்லாமல் போகும்போது, இந்த வார்த்தைகள் எதனை குறிக்கின்றன. நம்மில் யாரும் அழியாதவர்கள்; ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். ஒருவருக்கொருவர் உதவுங்கள். இந்த கொரோனா தொற்றுநோய் வாழ்க்கை எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு உணர்த்தியுள்ளது. அன்போடு நாம் வாழ வேண்டும். நம்முடன் இணைந்திருக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்படி வாழ வேண்டும். மாணவர் சத்யம் ஷாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. அதனால்தான் அவர் இறந்தார். சத்யம் ஜா மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் புத்திசாலித்தனமான மாணவர். கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே, கல்லூரியில் செயல்பட்ட கோவிட் ஹெல்ப்லைனை சத்யம் ஷா இயக்கி வந்தார். கொரோனாவிலிருந்து மீள்வதற்காக, அவர் பல மாணவர்களுக்கு உதவினார். மற்றவர்களுக்கு உதவியாக இருந்த எனது மாணவனை கூட இந்த கொரோனா விடவில்லை’ என்று உருக்கமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இறந்த மாணவர் சத்யம் ஷா, கொல்கத்தாவின் சேவியர் கல்லூரியில் போர்டு தேர்வில் 99 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தார். கடந்த ஆண்டு, ஸ்டீபன்ஸ் கல்லூரியின் வரலாற்றுத் துறையின் இதழியல் ஆசிரியராகவும் இருந்தார். கல்லூரியின் காந்தி-அம்பேத்கர் ஆய்வு வட்டத்தின் சபை உறுப்பினராகவும் இருந்தார். மாணவரின் மறைவு, சக கல்லூரி மாணவர்களை மட்டுமின்ற ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் மனரீதியாக பாதித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்….

The post கோவிட் ஹெல்ப்லைனில் மற்றவருக்கு உதவிய என்னுடைய மாணவனையும் இந்த கொரோனா விடவில்லையே!.. கல்லூரி முதல்வரின் உருக்கமான கண்ணீர் பதிவு appeared first on Dinakaran.

Tags : COVIT ,Kota ,Covid Helpline ,
× RELATED பவானி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து