காந்தி ஜெயந்தியையொட்டி மாணவர்களின் கை பதிவுகளால் பிரமாண்ட தேசியக்கொடி: டிஎஸ்பி பாராட்டு

அரக்கோணம்: காந்தி ஜெயந்தியையொட்டி அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் கை பதிவுகளைக் கொண்டு பிரமாண்ட தேசியக்கொடி வடிவமைத்துள்ளனர். அந்த மாணவர்களை டிஎஸ்பி பாராட்டினார். நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரக்கோணத்தில் சமூக தொண்டு அமைப்பினர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து பிரமாண்டமான தேசியக்கொடியை உருவாக்க திட்டமிட்டனர்.

இதற்காக  நேற்று அவர்கள், மிகப்பெரிய அளவிலான பேனரில் மாணவர்கள் தங்கள் பிஞ்சு கைகளால் வர்ணங்களை நனைத்து (பூசி) தேசியக் கொடியை கையின் பதிவு மூலம் உருவாக்கி சாதனை படைத்தனர். இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்ட சமூகத் தொண்டு அமைப்பு நிர்வாகி சுகந்தி வினோதினி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், 5 மாணவர்கள் ஒன்றிணைந்து 2,263  கை பதிவுகள் மூலம் தேசிய கொடியை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>