×

திருவள்ளூரில் உள்ள ஏ.டி.எம்.மில் சினிமா பாணியில் கொள்ளை முயற்சி: 4 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் கிராமத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கடந்த 15 ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. கேஸ் கட்டர் மூலம் ஷெட்டரை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் முதலில் சி.சி.டி.வி. கேமராவில் தங்களது உருவம் பதியாத வகையில் திரவத்தை தெளித்து மறைத்தனர். பின்னர் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயற்சித்தனர். அப்போது போலீசார் செல்போன் எண்ணுக்கு எச்சரிக்கை கிடைக்கவே அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கொள்ளை நடைபெறும் பகுதிக்கு விரைந்தனர். போலீசாரை கண்டதும் அந்த கொள்ளை கும்பல் ஆந்திரா பதிவு எண் கொண்ட காரில் தப்பிச்ச சென்றனர்.

போலீசார் அவர்களை பின்தொடர்ந்து துரத்தி சென்ற போதும் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு இருள்சுழந்த பகுதியில் இரங்கி தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மறுநாளே அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் ஏ.டி.எம். மையத்தில் இதே பாணியில் ஷெட்டரை உடைத்து சுமார் ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தபோது எளாவூர் ஏ.டி.எம். மையத்தில் திருட முயன்ற கும்பலே பெருங்களத்தூர் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையது என தெரியவந்தது. இதையடுத்து
திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட போலீசார் ஒருங்கிணைந்த தனிப்படை அமைக்கப்பட்டு கொலை கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லாரியை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓட முயற்சித்த நிலையில் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர். பிடிப்பட்ட ஒரு சிறுவன் சோஹில் உட்பட லுக்மன், சாஜித், ஹர்சாத் ஆகிய நான்கு பேரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எளாவூர் மற்றும் பெருங்களத்தூர் ஏ.டி.எம். கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்பது அம்பலமானது. வடமாநிலங்களில் இருந்து பருப்பு ஏற்றிச் செல்வதாக கூறி லாரியில் பயணிக்கும் இவர்கள் நெடுஞ்சாலை ஓரம் கார்களை திருடி அந்த காரில் சென்று ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து கேஸ் கட்டர், செல்போன், பணம், லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கொள்ளை கும்பலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags : Thiruvallur ,M. Mill , Attempted cinema style robbery at ATM in Tiruvallur: 4 arrested
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...