×

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பூங்கோதை ராஜன் வீதிவீதியாக வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு: உள்ளாட்சி ேதர்தலையொட்டி, திமுக வேட்பாளர் பூங்கோதை ராஜன், வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டர். காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சிங்கபெருமாள் கோயில் 5வார்டு மாவட்ட குழு உறுப்பினருக்கு போட்டியிடும் திமுக  தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், சிங்கபெருமாள்கோயில் ஊராட்சி திமுக செயலாளருமான கே.பி.ராஜன்  மனைவி  பூங்கோதை ராஜன், வேங்கடாபுரம், தெள்ளிமேடு, குருவன்மேடு, ரெட்டிபாளையம், கொங்கனாச்சேரி, கொளத்தாஞ்சேரி  ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து, அனல் பறக்கும் பிரசாரம் செய்தார்.

 அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் பேசிய திமுக  வேட்பாளர் பூங்கோதை ராஜன், நான் வெற்றி பெற்றால்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின் அனைத்து அரசு நலத்திட்டங்களையும் 5 வார்டு மாவட்ட குழுவுக்கு உட்பட்ட 24 ஊராட்சிகளுக்கும் கண்டிப்பாக பெற்று தருவேன். கிராமங்கள்தோறும் தார்சாலை அமைத்து தருவேன். தடையின்றி குடிநீர் கிடைக்க ஆவன செய்வேன்.  அதேபோல் உங்களது அனைத்து கோரிக்கைகள் குறித்து கட்சி தலைமையிடத்திலும், மாவட்ட நிர்வாகத்திலும்   அழுத்தம் கொடுத்து உங்கள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண்பேன். என்றார். அவருக்கு ஆதரவாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், ஆப்பூர் சந்தானம் உள்பட ஏராளமானோர் வாக்கு தீவிர சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : DMK ,Poonkothai Rajan ,Kattagollathoor union street , Kattagollathoor, Union, DMK candidate, gardener
× RELATED திமுக சார்பில் நீர்மோர் வழங்கல்