பாக்கம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தருவேன்: ராஜா ராமகிருஷ்ணன் உறுதி

மதுராந்தகம்: செங்கல்பட்டு 12வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ராஜாராமகிருஷ்ணன், மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள பாக்கம் ஊராட்சியில் ஏரிக்கரை மீது தார் சாலை, சுடுகாடு பாதை உள்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முழு மூச்சுடன் செயல் படுவேன் என வாக்குறுதியளித்தார். செங்கல்பட்டு  12வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன், மதுராந்தகம் 15வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுதா தணிகையரசு ஆகியோருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் திமுக எம்பி செல்வம், சென்னை திருவிக நகர் தொகுதி திமுக எம்எல்ஏ தாயகம்கவி, மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புகழேந்தி ஆகியோர் சிலாவட்டம் கிராமத்தில் வீதி வீதியாக நடந்து சென்று கிராம மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி குழு வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன் தாதங்குப்பம், பாக்கம், மேல்சிலாவட்டம், கலைஞர் நகர், அய்யனார் கோயில், சிறுகளத்தூர் ஆகிய கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதி கிராம மக்களிடையே பேசுகையில், பாக்கம் கிராமத்தில் இருந்து தாதங்குப்பம் செல்லும்  ஏரிக்கரை மண் சாலை, தார் சாலையாக மாற்றப்படும். சுடுகாடு சாலை அமைத்து தரப்படும். ரேஷன் கடை அமைத்து தரப்படும், குடிநீர் பிரசனை, தெருவிளக்கு, சாலை வசதி ஆகியவற்றை உடனுக்குடன் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தர், திருவிக நகர் பகுதி செயலாளர் தமிழ்வேந்தன், புஷ்பராஜ், அபைகுமார், சிலாவட்டம் நிர்வாகிகள் ராஜன், பாலு, ராமகிருஷ்ணன், கன்னியப்பன், ருத்ரகுமார், சிறுகளத்தூர் நிர்வாகிகள் குமார், யுவராஜ், ராஜன்பாபு,  பாக்கம் நிர்வாகிகள் பத்மநாபன், விநாயகம், மகேஷ், வெங்கடேஷ், பன்னீர்செல்வம், தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More