×

பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது கொல்கத்தா: வெங்கடேஷ் அரை சதம்

துபாய்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. துபாயில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசியது. வெங்கடேஷ், கில் இருவரும் கொல்கத்தா இன்னிங்சை தொடங்கினர். கில் 7 ரன் எடுத்து ஆட்டமிழக்க, வெங்கடேஷ் - திரிபாதி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர். திரிபாதி 34 ரன் எடுத்து (26 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) பிஷ்னோய் பந்துவீச்சில் அவுட்டானார்.

வெங்கடேஷ் 67 ரன் (49 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பிஷ்னோய் சுழலில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் மார்கன் 2 ரன் மட்டுமே எடுத்து ஷமி வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். கடைசி கட்டத்தில் ராணா அதிரடியில் இறங்க, கேகேஆர் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. ராணா 31 ரன் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), செய்பெர்ட் 2 ரன், தினேஷ் கார்த்திக் 11 ரன்னில் வெளியேற, கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது.

நரைன் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் 3, பிஷ்னோய் 2, ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து வென்றது. கே எல் ராகுல் அதிகபட்சமாக  67 ரன் ( 55 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். மயாங்க் அகர்வால் 40 ரன்(27பந்து),ஷாருக்கான் 22 ரன் (9 பந்து) எடுத்தனர். கேகேஆர் பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட், மற்ற மூவர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Tags : Kolkata ,Venkatesh ,Punjab , Punjab, Kolkata, Venkatesh, IPL
× RELATED பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர்...