இன்று கிராமசபை கூட்டம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெறும் வட்டாரங்களிலும், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெறும் ஊராட்சிகளிலும், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த ஊராட்சிகளை தவிர, மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் அரசினால், வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக தவறாமல் கடைப்பிடித்து இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இதில் பெருவாரியான மக்கள் பங்கேற்கும் பொருட்டு கிராம ஊராட்சிகளில் முழுமையான அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்கள் செய்து சிறப்பான முறையில் கிராம சபை கூட்டத்தை நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை கண்காணிக்கவும், பார்வையிடவும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>