அதானியின் ஒரு நாள் வருவாய் 1000 கோடி இது யாருடைய இந்தியா?...கமல் கேள்வி

சென்னை: 32 மில்லியன் இந்தியர்கள் வறுமை கோட்டை நோக்கி செல்கின்றனர். அதானியின் ஒரு நாள் வருவாய் 1000 கோடி. இது யாருடைய இந்தியா என கேள்வி கேட்டுள்ளார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது.32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமை கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?’ என கேட்டுள்ளார்.

Related Stories:

More
>