×

நாளை மறுதினம் அண்ணாத்த பாடல் வெளியீடு

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் ஒரு பாடல், நாளை மறுநாள் (அக்.4) வெளியிடப்படுகிறது. சன் பிக்சர்ஸ் சார்பில், ரஜினிகாந்த்  நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை சிவா இயக்குகிறார். இமான் இசை அமைக்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.‘எந்திரன்’, ‘பேட்ட’ படங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த் இணைந்துள்ள 3வது படைப்பு ‘அண்ணாத்த’. இந்தப் படம் தீபாவளி தினத்தன்று வரும் நவம்பர் 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.

இந்நிலையில், இமான் இசையில் விவேகா எழுதி யுள்ள பாடலை, மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்தப் பாடல் வரும் 4ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ‘அண்ணாத்த’ பாடல் வெளியாகப் போகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Annatha , Annatha, Song Release, Rajini
× RELATED ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா காதல் திருமணம்