ஊட்டி, நெல்லை சார் பதிவாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு

சென்னை: தமிழகத்தில் முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த 38 அரசுஅலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர். ஊட்டியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடந்தது. இதில், கணக்கில் வராத ரூ.78 ஆயிரத்து 495 பறிமுதல் செய்யப்பட்டது. துணைப்பதிவாளர் செந்தில்குமார்,  தனியார் வங்கியை சேர்ந்த ராஜ்குமார் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. நெல்லை: நெல்லை டவுன் சார்பதிவாளர் அலுவலகத்தி நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.86 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நெல்லை சார் பதிவாளர் உமாபதி, அலுவலக கண்காணிப்பு வீடியோகிராபர் சண்முகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>