எல்ஐசி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பி.சி.பட்நாயக் பொறுப்பேற்பு

மும்பை: எல்ஐசி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக, பி.சி.பட்நாயக் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.  பி.சி.பட்நாயக், 1986ல், எல்ஐசியில் நேரடி  அதிகாரியாக இணைந்தார். முதுகலை பட்டமும், இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் பெலோஷிப் பட்டமும் பெற்றுள்ளார். எல்ஐசியின் மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்பதற்கு முன்பு, காப்பீட்டு ஆணையத்தின் செகரட்டரி ஜெனரலாக இருந்தார்.

இதற்கு முன்பு, ஆக்ராவில் உள்ள வட மத்திய மண்டலத்தின் பயிற்சி மைய இயக்குநராகவும் இருந்துள்ளார். இதுதவிர, எல்ஐசியில், விற்பனை, புது வணிகள், பணியாளர் நலன், பென்ஷன் மற்றும் குழு காப்பீடு உட்பட பலவற்றிலும் முக்கிய பொறுப்புகளை இவர் வகித்துள்ளார்.   மேலும், எல்ஐசி மேற்கு மண்டலம், வட மத்திய மண்டலம், கிழக்கு மண்டலத்தின் பிராந்திய மேலாளராகவும் பதவி வகித்துள்ளார் என, எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>