×

சிகாகோ ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஸ்விடோலினா

சிகாகோ: அமெரிக்காவில் நடைபெறும் சிகாகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா தகுதி பெற்றார். 3வது சுற்றில் ருமேனியா வீராங்கனை எலனா கேப்ரியலா ரூஸுடன் (98வது ரேங்க்) மோதிய ஸ்விடோலினா 6-3, 6-3 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி ஒரு மணி, 48 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் (12வது ரேங்க்), தெரசா மார்டின்கோவா (53வது ரேங்க், செக் குடியரசு) மோதினர். இதில் பெலிண்டா  6-2, 7-6 (7-5) என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.  விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 41நிமிடங்களுக்கு நீடித்தது.

செக் குடியரசின்  மார்கெதா வொண்ட்ருசோவா (41வது ரேங்க்)  6-4, 6-3 என்ற நேர் செட்களில் ஜில் தெய்க்மனையும் (38வது ரேங்க், சுவிஸ்), அமெரிக்காவின் டேனியலி கொலின்ஸ் (28வது ரேங்க்) 6-2, 6-4 என நேர் செட்களில்  பெல்ஜியம் வீராங்கனை  எலிஸ் மெர்டன்சையும் (18வது ரேங்க்)  வென்று காலிறுதியில் விளையாட உள்ளனர். முன்னணி வீராங்கனைகள் கார்பினி முகுருசா (ஸ்பெயின்), ஆன்ஸ் ஜெபர் (16வது ரேங்க், துனிசியா), எலனா ரைபாகினா (17வது ரேங்க், கஜகஸ்தான்) ஆகியோருடன் 200வது ரேங்க்கில் உள்ள மெய் ஹோன்டமாவும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
முகுருசாவுடன் 3வது சுற்றில் மோதுவதாக இருந்த விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகினார்.


Tags : Chicago Open Tennis ,Svitolina , Chicago Open Tennis, Quarterfinals, Svitolina
× RELATED ஆக்லாந்து டென்னிஸ் கோப்பையை தக்கவைத்தார் கோகோ காஃப்