மம்தா போட்டியிட்ட பவானிப்பூர் தொகுதியில் 57 சதவீத வாக்குப்பதிவு: நாளை வாக்கு எண்ணிக்கை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள பவானிப்பூர் உள்ளிட்ட மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பவானிப்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, அவர் முதல்வராக நீடிக்க முடியும். இதனால், இத்தேர்தல் முடிவை அரசியல் வட்டாரம் பரபரப்பாக எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்நிலையில், பவானிப்பூர் தொகுதியில் எதிர்பார்த்ததை விட மிக குறைவாக, மொத்தம் 57.09 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதே நேரம், இடைத்தேர்தல் நடந்த மற்ற 2 தொகுதிகளான சாம்சர்கன்ச், ஜாங்கிபூரில் முறையே 79.92 சதவீதம், 77.63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Related Stories:

More
>