நவராத்திரி பண்டிகை நெருங்குவதால் தினமும் கோயில்களை திறக்க வேண்டும்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் கே.அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவிட் தொற்று நோயை, கோயில் திறக்காததற்கு காரணமாக சொல்வது நகைப்பிற்குரிய செயல். திருக்கோயிலை நம்பியிருக்கும் சிறு வியாபாரிகள், தேங்காய், பழம் விற்பவர்கள் வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்ல அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 7ம் தேதி காலை 11 மணி அளவில் முக்கிய கோயில்களுக்கு முன்பாக பாஜ நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள். அதுவும் நவராத்திரி பண்டிகை நெருங்குவதால் உடனே திறக்க வேண்டும். இந்த போராட்டத்தை பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஒருங்கிணைக்கிறார்.

Related Stories:

More
>