×

திருச்செந்தூர் கோயிலில் காலியிடங்களில் நந்தவனம்: பக்தர்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறநிலையத்துறை சார்பில் 42 திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதுடன் காலியாக உள்ள இடங்களில் நந்தவனம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை, திருப்பதி கோயிலுக்கு இணையாக மாற்றியமைக்க பல்வேறு திருப்பணிகள் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதனை தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டிருந்த அமைச்சர் சேகர்பாபுவிடம், பக்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர். இதன் காரணமாக கடந்த 20 மற்றும் 21ம் தேதிகளில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கட்டமைப்பது, கோயில் வளாகத்தில் காலியாக உள்ள பகுதிகளை நந்தவனமாக்குவது, மேலும் பழுதடைந்த கட்டிடங்களை சரி செய்து பராமரிப்பது உள்ளிட்ட 42 பணிகள் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கோயிலில் பழுதடைந்த கழிப்பறைகளை பழுது நீக்கி பராமரிப்பது, கோயிலை சுற்றியுள்ள கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி, காலியான பகுதிகளை நந்தவனம் ஆக்குவதற்கான பணிகளும் நடந்து வருகிறது. மேலும் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.250 மற்றும் ரூ.100 கட்டண தரிசனங்களை விரைவுபடுத்தும் வகையில் சண்முக விலாச மண்டபத்தில் பக்தர்கள் அமர்வதற்கு தடை விதித்து தரிசன வரிசைகள் சீர்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Nandavanam ,Thiruchendur temple , Nandavanam in vacancies at Thiruchendur temple: Devotees happy
× RELATED தூத்துக்குடி புதிய பேருந்து...