×

உயர்நீதிமன்றம் உத்தரவு: கோடநாடு விவகாரத்தில் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க கோரும் வழக்கு: 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டு உள்ளதாவது: கோடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 8 பேரை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவர்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காக மனுதாரர்கள் மூவரும் குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் தெளிவானதாக இல்லை. கூடுதலாக சிலரை விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மனுதாரர்கள் விளக்கமாக கூறவில்லை. ஏன் விசாரிக்க வேண்டும், ஏன் சம்மன் அனுப்ப வேண்டும் என்ற காரணங்கள் குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததுடன், இந்த மனு குறித்து போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.,27 க்கு ஒத்திவைத்தனர்.

இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Palanisamy ,Sasikala ,Kodanad , Kodanad affair, Palanisamy, Sasikala, adjournment
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!