×

ஆம்ஆத்மி மாஜி மாநில தலைவரின் மகன் ஓட்டலில் தற்கொலை: தந்தை பதவியை ராஜினாமா செய்த காரணமா?

டேராடூன்: ஆம்ஆத்மி கட்சியின் முன்னாள் மாநில தலைவரின் மகன், ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது, மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உத்தரகாண்ட் மாநில ஆம்ஆத்மி முன்னாள் தலைவர் கலெர் என்பவரின் மகன் சிக்கந்தர் கலெர் (24) நைனிடாலின் ராஜ்புத் சாலையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் தனது அறையிலிருந்து வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், சிக்கந்தர் தங்கியிருந்த கதவை தட்டினர். ஆனால், கதவு உள்தாழிட்டு இருந்ததால் எவ்வித பதிலும் கிடைக்காததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஓட்டல் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, படுக்கையில் சிக்கந்தர் இறந்து கிடந்தார். ேபாலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்துபோன சிக்கந்தர் சம்பவ நேரத்தில் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார்.

வாந்தியும் எடுத்துள்ளார். உடல் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தடயங்களின் மாதிரிகளை போலீசார் சேகரித்தனர். சிக்கந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ேபாலீசார் கூறுகையில், ‘ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் பதவியை அவரது தந்தை கலெர், கடந்த சில வாரங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அவர், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமியை எதிர்த்து காதிமா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், மதுவில் விஷம் கலந்து அவரது மகன் சிக்கந்தர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தந்தைக்கு சீட் மறுக்கப்பட்ட காரணமா? அல்லது தனது தந்தை மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்த காரணமா? அல்லது வேறு ஏதேனும் சொந்த காரணமா? என்பது குறித்து வழக்குபதிந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.


Tags : Aam Aadmi Party ,president , Former Aam Aadmi Party state president's son commits suicide at hotel: Why did father resign?
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...