கோவையில் 4 மாவட்ட காவல்துறை குறைதீர் கூட்டம்

கோவை : கோவை உள்பட 4 மாவட்ட காவல்துறை களப்பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் கோவை சரக டிஐஜி அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் வழிக்காட்டுதலின்படி, கோவை காவல் சரகத்திற்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட காவல்துறையை சேர்ந்த களப்பணியாளர்களுக்கு “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் சரக அளவிலான குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கோவை சரக போலீஸ் துணை தலைவர் (டிஐஜி) அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கோவை சரக டிஐஜி முத்துசாமி தலைமை வகித்தார்.

இதில், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி என 4 மாவட்டத்தை சேர்ந்த 138 காவல்துறை களப்பணியாளர்கள் பங்கேற்றனர். இவர்கள், தங்களின் பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களை கோவை சரக டிஐஜியிடம் நேரடியாக சமர்ப்பித்தனர். அந்த மனுக்கள் அங்கேயே பரிசீலனை செய்யப்பட்டது. பின்னர், தகுதியின்படி குறைகளை களைய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிவுரைகளை கோவை சரக டிஐஜி முத்துசாமி வழங்கினார்.

Related Stories:

More
>