மடித்தொரை கிராமத்தில் இயற்கை வேளாண்மை குறித்த கூட்டம்

ஊட்டி : ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் சார்பில் மடித்தொரை கிராமத்தில் `எனது கிராமம் எனது பெருமை’ என்ற திட்டத்தின் கீழ் பருவநிலை பின்னடைவு விவசாயம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்த விவசாயிகள் - விஞ்ஞானிகள் தொடர்பான கூட்டம் நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குநர் சிபிலா மேரி துவக்கி வைத்து இயற்கை விவசாயத்தின் அவசியம், மண் வள பாதுகாப்பு குறித்தும் பேசினார். மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ராஜா வரவேற்றார்.

மைய தலைவர் கண்ணன் பேசுகையில்,`விவசாயத்திற்கு அரசு செயல்படுத்தும் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றார். விஞ்ஞானி கஸ்தூரி திலகம், பயிர் உற்பத்தி திறனுக்காக மண்ணின் தரத்தையும், ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார். விஞ்ஞானி வனிதா, விவசாயிகள் தங்களின் வருமானத்தை மேம்படுத்துவதற்கான பாதுகாப்பு, விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு சிஒ4, சிஒ5 ஆகிய புல் வகைகள் வழங்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் புல் வகைககள் சாகுபடி குறித்து கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. மண் மற்றும் நீர்பாதுகாப்பு குறித்த கண்காட்சியையும் விவசாயிகள் பார்வையிட்டனர். பின்னர், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முக கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது. இதில், முதன்மை விஞ்ஞானி சுந்தராம்பாள், சுதீர்குமார் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

Related Stories:

More
>