×

67 ஆண்டுகளுக்கு பின் டாடா வசம் ஏர் இந்தியா?

டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஏலத் தொகையை அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்கியதாக வெளியான தகவலுக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் ஏலத்தில் எடுக்கவில்லை.  ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றி பெறவில்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்து வந்த பாதை:
இந்தியாவின் முதல் விமான நிறுவனமான ஏர் இந்தியாவுக்கும் டாடா நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு 1932-ல் தொடங்கியது

1932-ல் டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் இந்தியாவின் முதல் பயணிகள் விமான சேவையை தொடங்கினார் ஜே.ஆர்.டி.டாடா

முதல் விமானத்தை ஜே.ஆர்.டி.டாடாவை கராச்சியிலிருந்து மும்பை நகருக்கு 1932 அக்.15-ம் தேதி ஓட்டி வந்தார்

மும்பையில் இருந்து அந்த விமானத்தை சென்னைக்கு டாடாவின் நண்பரான நெவில் வின்சென்ட் ஓட்டி வந்தார்

டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரை 1938-ல் டாடா ஏர்லைன்ஸ் என்று மாற்றினார் ஜே.ஆர்.டி.டாடா

2-ம் உலகப்போருக்குப் பின் 1946 ஜூலை 29-ல் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா என்று பெயர் மாற்றமடைந்தது

இந்தியா விடுதலை பெற்றபின் 1948-ல் ஏர் இந்தியாவின் 49% பங்குகளை இந்திய அரசு வாங்கியது

1953-ல் ஏர் கார்ப்பரேஷன் சட்டத்தை இயற்றிய ஒன்றிய அரசு, ஏர் இந்தியாவின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது

ஏர் இந்தியா நிறுவனத்தை அரசு கையகப்படுத்திய பிறகும் அதன் தலைவராக ஜே.ஆர்.டி.டாடாவே தொடர்ந்தார்

வெளிநாட்டு விமான சேவை நிறுவனம் ஏர் இந்தியா என்றும் உள்நாட்டு சேவை நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் என்றும் பிரிக்கப்பட்டது

ஏர் இந்தியா விற்பனை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு டாடா சன்ஸின் ஒப்பந்தபுள்ளியை ஏற்றுக்கொண்டது

இதன் மூலம் 67 ஆண்டுகளுக்கு பின் டாடா வசம் ஏர் இந்திய நிறுவனம் செல்கிறது. 


Tags : Air India ,Tata , Air India now owned by Tata after 67 years
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...