×

பர்கூர் மலைப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட இருவர் கைது

அந்தியூர் : ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ளது பர்கூர் மலைப்பகுதி. இங்குள்ள கோயில்நத்தம் பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பர்கூர் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கொட்டச்செடி, உன்னிச் செடிகளுக்கிடையில் கஞ்சா  பயிரிட்டிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அதனைப் பயிரிட்ட கோயில்நத்தம் பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்த(30) என்பவரிடமிருந்து 3 செடிகளில் 4 கிலோ கஞ்சாவும், மகாதேவன் (51) என்பவரிடமிருந்து 3 செடிகள் எற 7 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக-கர்நாடக எல்லையோரம் பர்கூர் மலைப்பகுதி அமைந்துள்ளதால், இங்கு எளிதில் கஞ்சாவை பயிரிட்டு வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : Burgur hillside , Anthiyur: Erode district is located next to Anthiyur in the Bargur hills. Bargur is said to have cultivated cannabis in the Koilnatham area here
× RELATED சென்னை விமான நிலையத்தில் நடிகர்...