×

CMDA-வில் தகுதியில்லாத 18 பேர் பணி நியமனம்: அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு அம்பலம்

சென்னை: அதிமுக ஆட்சியில் கடைசி நேரத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் உரிய தகுதிகள் இல்லாத 18 பேர் பணியமர்த்தப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனப்படும் CMDA-வில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோடைப்பிஸ்ட் உள்ளிட்ட 131 பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு அறிவிக்கப்பட்டது.

இதில் 18 பேருக்கு மட்டும் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஒருநாள் முன்பு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது தெரியவந்தது. மேலும் 18 பேரும் அந்த பணிகளுக்கு தகுதியில்லாதவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது பணிக்கான வயது வரம்பு 30ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் 39 வயதுடைய நபர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று பட்டப்படிப்பு தகுதியுடைய பணிகளுக்கு பட்டம் பெறாதவர்களை பணியமர்த்தி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. முறைகேடாக பணியமர்த்தப்பட்ட 18 பேரையும் பணிநீக்கம் செய்ய CMDA முடிவு செய்துள்ளது. இந்நிலையில் முறைகேடாக தேர்வு செய்யப்பட்டது குறித்து பணி நியமனத்தில் தொடர்புடைய 2 CMDA அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு CMDA உத்தரவிட்டுள்ளது.

Tags : AIADMK , CMDA
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...