அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை அமல்படுத்தாத ஆளுநர்: நளினி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!

சென்னை: அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் அமல்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, 29 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் தனது தண் டனையை நிறுத்தி வைத்தும், விடுதலை செய்யக் கோரியும்,அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் அமல்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என அறிவிக்ககோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்மீது ஆளு நர் நீண்டகாலமாக எந்த முடிவும் எடுக்காமல்  7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய முடியும் என தமிழக ஆளுநர் விளக்கமளித்து இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.  ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரையும் 2018 செப்டம்பர் 9ல் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது என்று நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>