மகளிர் காவல்நிலையத்துக்கு புதிய கட்டிடம் ரூ.65.80லட்சத்தில் கட்டுமான பணி தீவிரம்

ஈரோடு :  ஈரோட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ரூ.65.80லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிட கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் பழமையின் காரணமாக இடித்து அகற்றப்பட்டது. அதன்பின், தற்காலிகமாக ஈரோடு கள்ளுக்ககடைமேடு முத்துகுமாரசாமி வீதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கென புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஈரோடு ஸ்டேட் பேங்க் ரோட்டில், தெற்கு போக்குவரத்து போலீஸ் அருகே பயன்பாடற்று இருந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அரசு மகளிர் காவல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்கு அரசு ரூ.65.80 லட்சம் நிதி ஒதுக்கியது. இதன்பேரில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம், கோவை கோட்டத்தின் சார்பில் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி அனைத்து மகளிர் காவல்நிலைய கட்டிட கட்டுமான பணி துவங்கப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கட்டிட பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் 25ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>