×

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரூ.20 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பு

தி.மலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வருணலிங்க சன்னதியும் இதையொட்டி 50 சென்ட் நிலமும்உள்ளது . இந்த இடத்தில் தங்கியிருந்த சிவனடியார் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அதன்பிறகு குடியிருப்பை கையகப்படுத்திய அப்போதைய கோவில் இணை ஆணையர் ஞானசேகர் குடியிருப்பையும் அதன் நுழைவுவாயில் கதவையும் பூட்டிவைத்தார். இந்த இடத்தின் சாவிகள் அனைத்தும் அண்ணாமலையார் கோவில் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் அந்த இடத்தில் கட்டுமான பணிகள் செய்வதை அறிந்த கோவில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

கோவில் ஊழியர்களின் உதவியோடு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அறநிலையத்துறை மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Thiruvannamalai Girivalapada , Thiruvannamalai
× RELATED திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கஞ்சா பதுக்கி விற்ற சாது கைது