×

ஒன்றிய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குகிறது டாடா நிறுவனம்: விலைப்புள்ளியை ஏற்றது அமைச்சர்கள் குழு..!!

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா சன்ஸ் அளித்த விலைப்புள்ளி ஏற்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விற்பனை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு டாடா சன்ஸின் ஒப்பந்தபுள்ளியை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஒன்றிய அரசு நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால், அந்த நிறுவனத்தை விற்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஏர் இந்தியாவை வாங்க எந்த நிறுவனமும் முனைப்பு காட்டாத நிலையில், டாடா குழுமமும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் காட்டின.

இதனையடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமும் தீவிரம் காட்டி வருவதாகவும், எனவே அந்த குழுமத்துக்கே வெற்றி கிடைக்கும் எனவும் ஏர் இந்தியா முன்னாள் இயக்குனர் ஜிதேந்தர் பார்கவா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஏர் இந்தியா விற்பனை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு டாடா சன்ஸின் ஒப்பந்தபுள்ளியை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து, டாடா சன்ஸ் நிறுவனத்திடம் ஏர் இந்தியாவை வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Tata Motors ,UK Air India , Air India, Tata, Group of Ministers
× RELATED தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ்...