டெல்லியில் தமிழ் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு: பெண்ணின் உறவினர்கள் அப்பகுதியில் குவிந்து போராட்டம்..!

டெல்லி: டெல்லி ஜல்விஹார் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்த தமிழ்ப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். டெல்லியில் அழகு நிலையம் நடத்திவருபவரின் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார் கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி (21). காலையில் 7 மணி அளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு ஜல்விஹார் பகுதிக்கு வேலைக்கு வந்துள்ளார். சரியாக 8.30 மணி அளவில் அவர் மர்மமான முறையில் வேலை செய்துவந்த வீட்டின் குளியல் அறையில் எறிந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் உரிமையாளரை பொறுத்தவரை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என தெரிவித்தார். ஆனால் மின்சாரம் தாக்கியதற்கு எந்த தடையமும் இல்லை. அவரது உடல் முழுமையாக தீயில் எறிந்திருக்கிறது. எனவே அவர் இறப்பில் மர்மம் இருக்கிறது என்று தமிழர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

யார் இந்த லட்சுமி?

லட்சுமியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தனது குடும்பத்தாருடன் அதாவது தந்தை மற்றும் தாயுடன் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

Related Stories:

More
>