டெல்லியை தொடர்ந்து மேலும் சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை: கொரோனா நோயாளிகளை பாதிக்கும் என்பதால் தடை விதிப்பு

பாட்னா: நவராத்திரி, தீபாவளி என பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இன்று முதல் ஒடிசா மற்றும் ராஜஸ்தான் பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பதை தடுப்பதற்காக, நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2018ல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அந்த வகையில் டெல்லியில் சுற்றுசுழலை பாதுகாக்கும் வகையில் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கு அம்மாநில அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது.

அந்த வரிசையில் ராஜஸ்தானுக்கு, ஒடிசாவும் இணைந்துள்ளன. இது தொடர்பாக ராஜஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இன்று முதல் ஜனவரி 31-ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா 3-வது அலைக்கான எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பதால் பட்டாசு வெடிப்பதன் மூலம் ஏற்படும் புகை நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஒடிசாவில் அக்டோபர்மாதம் முழுவதும் பட்டாசுகள் வெடிப்பதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>