×

சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே கல்வான் மோதலுக்கு காரணம் : இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே தாக்கு

டெல்லி : இந்தியா- சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தீர்க்கப்படும் வரை எல்லைக் கட்டுப்பாடு கோடு வன்முறைகள் நீடிக்கும் என ராணுவ தலைமை தளபதி நரவானே கூறியுள்ளார்.இந்தியா, சீனா படைகள் இடையே லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலில் 2 தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. பின்னர் படைகள் பின்வாங்கப்பட்டாலும் தொடர் பதற்றத்தால் இரு நாட்டு படைகளும் எல்லைகளில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன. தங்கள் வாகன கட்டமைப்பை மேம்படுத்தி வரும் சீனா, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி 100 வீரர்களை உத்தரகாண்ட் மாநிலம் பரஹோடி பகுதிக்குள் அனுப்பி பின் திரும்ப பெற்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே கல்வான் மோதலுக்கு இந்தியாவே காரணம் என அண்மையில் குற்றம் சாட்டிய சீனாவிற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. லடாக் எல்லையில் இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறி சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை கல்வான் மோதலுக்கு வழிவகுத்ததாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராணுவ தலைமை தளபதி நரவானே, சீனாவிற்கு பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இந்த கொரோனா காலத்திலும் எல்லையில் படைகளை குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Tags : China ,Kalwan ,Indian Army ,Narawane , இந்தியா,சீனா,லடாக்,தளபதி, நரவானே
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...