கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு: உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

உதகை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கில் தொடர்புடைய 10 பேரில் நிபந்தனை ஜாமினில் உள்ள சயான், சிறையில் உள்ள வாளையாறு மனோஜ் இன்று ஆஜராகின்றனர். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்ற 8 பேரும் கொரோனா பரவல் காரணமாக ஆஜராவதில்லை. தனிப்படையினர் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வரும் விசாரணை பற்றிய அறிக்கையை இன்று தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. விசாரணையை முழுவதுமாக முடிக்க மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்யவும் வாய்ப்புள்ளது. கோடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கிலும் மறுவிசாரணை நடத்தி வருவது பற்றியும் தெரிவிக்க வாய்ப்புள்ளது.

Related Stories:

More
>