தென் கொரியாவுடன் மீண்டும் அமைதி பேச்சு: வடகொரிய அதிபர் திடீர் விருப்பம்

சியோல்: வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. இதுபற்றி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தின. இதனால், தனது நாட்டின் மீது ஏற்கனவே விதித்துள்ள பொருளாதார தடையை அமெரிக்கா மேலும் கடுமையாக்கி விடுமோ என்ற அச்சம், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தென்கொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அவர் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், தென்கொரியா உடனான தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்தும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு இருப்பதாக நேற்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories: