×

விமானப்படை புதிய தளபதி ராம் சவுதாரி பதவியேற்பு: போர் விமானங்களில் 3,800 மணி நேரம் பறந்தவர்

புதுடெல்லி: விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரி நேற்று பதவியேற்றார். விமானப்படையின் தளபதியாக இருந்த ஆர்.கே.எஸ்.பதவுரியாவின் பதவிக்காலம்  நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து,  புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று அப்பதவியை ஏற்றுக் கொண்டார். விமானப்படையில் பல்வேறு முக்கிய பதவிகளை சவுதாரி வகித்துள்ளார்.  லடாக் எல்லையில்  சீனாவுடன் மோதல் ஏற்பட்ட போது, அந்த பகுதிக்கான விமானப்படை பிரிவின் தளபதியாக பணியாற்றினார்.   மேலும், போர் விமானங்களை நவீனமயமாக்கும் திட்டங்களிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்.

* சவுதாரி கடந்த 1980ல் விமானப்படையில் சேர்ந்தார்.
* விமானப்படையின் அனைத்து போர் விமானங்களையும்  இதுவரையில் 3,800 மணி நேரம் இயக்கிய அனுபவம் உடையவர்.
* 1980ம் ஆண்டில் சியாச்சின் சிகரத்தை கைப்பற்றிபோது, ‘ஆபரேஷன் மேகதூது’வில் இடம் பெற்றார்.
* 1999ல் நடந்த கார்கில் போரிலும், விமானப்படை தாக்குதலில் ஈடுபட்டார்.

Tags : Ram Chaudhary , Air Force, Commander, Ram Chaudhary, Fighter Aircraft,
× RELATED டெல்லியில் இந்திய விமானப்படையின்...