புதுடெல்லி: விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரி நேற்று பதவியேற்றார். விமானப்படையின் தளபதியாக இருந்த ஆர்.கே.எஸ்.பதவுரியாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று அப்பதவியை ஏற்றுக் கொண்டார். விமானப்படையில் பல்வேறு முக்கிய பதவிகளை சவுதாரி வகித்துள்ளார். லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் ஏற்பட்ட போது, அந்த பகுதிக்கான விமானப்படை பிரிவின் தளபதியாக பணியாற்றினார். மேலும், போர் விமானங்களை நவீனமயமாக்கும் திட்டங்களிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்.