×

மம்தா போட்டியிடும் பவானிப்பூரில் 53.32% வாக்குப் பதிவு: பல இடங்களில் மோதல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மம்தா பானர்ஜி முதல்வரானார். ஆனால், நந்தி கிராம் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில், பவானிப்பூர் உட்பட 3 தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதில், பவானிப்பூரில் மம்தா போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜ.வை சேர்ந்த பிரியங்கா திப்ரிவால் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வாக்குப்பதிவின் போது பல இடங்களில் திரிணாமுல் - பாஜ தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மாலை 5 மணி நிலவரப்படி இத்தொகுதியில் 53.32 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாலை 6 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் பற்றி இன்று அறிவிப்பதாகவும் அது தெரிவித்தது. மித்ரா பள்ளி மையத்தில் மம்தா தனது வாக்கை பதிவு செய்தார். இது  தவிர, ஜாங்கிப்பூர் மற்றும் சம்செர்கன்ச் தொகுதிகளிலும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது.

Tags : Mamata's Bhavanipur , Mamta, Bhavanipur, Voting, Conflict
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை