×

கபில் சிபல் வீடு மீது தாக்குதல் சோனியாவுக்கு ஜி-23 தலைவர்கள் கடிதம்

புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கட்சியை விட்டு விலகுவது பற்றி, காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் குழுவான ‘ஜி-23’யை சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல், ‘மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து விவாதிக்க செயற்குழு கூட்டத்ைத கூட்ட வேண்டும்,’ என்று கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினார். மேலும், அதில் கட்சியின் நிரந்தர தலைவர் தேவை என்ற பிரச்னையையும் கிளப்பினார். இதனால், கொதிப்படைந்த காங்கிரஸ் தொண்டர்கள், ேநற்று முன்தினம் அவரது வீட்டை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தை கண்டித்துள்ள ஜி-23 குழுவை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா, கபில் சிபல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கும்படி சோனியாவை வலியுறுத்தி உள்ளார். மேலும், இக்குழுவை சேர்ந்த மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான குலாம் நபி ஆசாத்தும், ‘கபில் சிபல் நேர்மையான காங்கிரஸ்காரர். கட்சியின் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் போராடுபவர். கட்சியின் நலனுக்காக யார் ஆலோசனை வழங்கினாலும் அதை வரவேற்க வேண்டும். இதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டது கண்டிக்கத்தக்கது. இப்பிரச்னைகள் குறித்து விவாதிக்க, கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்,’ என்று சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விரைவில் செயற்குழு கூட்டம்
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்டும்படி ஜி-23 தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதிய நிலையில், கட்சியின் தகவல் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று பேட்டி அளித்தார். அதில், ‘ஜி 23 தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூட்டப்படும்,’ என்று தெரிவித்தார்.

Tags : G-23 ,Sonia ,Kapil Sibal , Kapil Sibal, attack, Sonia, leaders
× RELATED தேர்தல் பத்திரங்கள் விவகாரம்; சிறப்பு...