நாட்டை வெறும் வரைபடமாக பார்க்கிறார் இந்தியாவின் வரலாறு தெரியாதவர் மோடி: ராகுல் காந்தி கடும் தாக்கு

திருவனந்தபுரம்:கேரள மாநிலம், வயநாடு தொகுதி எம்பி.யான  ராகுல் காந்தி 2  நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன் தினம் கேரளா வந்தார். இந்த தொகுதிக்கு  உள்பட்ட  மலப்புரம் மாவட்டம், காளிகாவு பகுதியில் முஸ்லிம் லீக் கட்சி  சார்பில்  நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியது:

இந்தியா  உயிர் துடிப்பு உள்ள ஒரு கலாசார பூமியாகும். சாவர்க்கர் போல்  உள்ளவர்களை  அங்கீகரிப்பவர்களுக்கு இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நம் நாட்டின்   சரித்திரம், நம் நாடு எத்தகைய சவால்களை சந்தித்து இந்த நிலையை   அடைந்துள்ளது என்பது குறித்து பிரதமர் மோடிக்கு எதுவும் தெரியாது.   அனைத்தும் தன்னுடைய காலுக்கு அடியில் தான் உள்ளது என்ற ஆணவத்துடன் மோடி   செயல்படுகிறார்.  நம்நாட்டின் வரலாறு குறித்து எதுவுமே தெரியாத மோடி   இந்தியாவை ஒரு வரைபடமாக மட்டுமே பார்க்கிறார். மோடியை  எதிர்த்து நாம்  அனைவரும் இணைந்து போராட வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More
>