சமுதாய வளைகாப்பு விழா: பூந்தமல்லி எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் திருவள்ளூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வேப்பம்பட்டில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட திட்ட இயக்குனர் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி அனைவரையும் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் முன்னிலை வகித்தார். விழாவில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கர்ப்பிணி பெண்களுக்கு நலங்கு வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆர்.ஜெயசீலன், டி.ராமகிருஷ்ணன், பூவை எம்.ஜெயக்குமார், மாவட்ட கவுன்சிலர் இந்திரா குணசேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் த.எத்திராஜ், கிருபாவதி தியாகராஜன், ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>