சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

பூந்தமல்லி: குன்றத்தூர் அருகே சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகேயுள்ள நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர்  பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நந்தம்பாக்கத்தை சேர்ந்த குமரன் (29), என்பவர் தனக்கு 15 வயது இருக்கும்போது அவரது வீட்டிற்கு சென்றபோது தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இந்த விஷயம் தெரிந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.  

தற்போது, தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் குமரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அக்காவை குமரனின் அண்ணன் திருமணம் செய்து உள்ளார். அவர் அக்கா கர்பமாக இருந்ததால் அவரை கவனித்து கொள்வதற்காக  வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அக்காவின் கணவரின் தம்பி குமரன் அவரிடம் ஆசை வார்த்தை கூறியும் மிரட்டியும் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு தெரியவர குடும்பத்தாரின் சம்மதத்துடன் அந்த சிறுமியை திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை வீட்டை விட்டு துரத்தி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இ்தையடுத்து குமரன் மீது போக்சோ மற்றும் சிறுமியை திருமணம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று  சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>