பழவேற்காடு பகுதியில் முதல் மனைவியை அடித்து துரத்தி விட்டு 2வது திருமணம் செய்த வாலிபருக்கு வலை

பொன்னேரி:  பழவேற்காடு பகுதியில் முதல் மனைவியை தாய் வீட்டிற்கு அடித்து துரத்தி விட்டு இரண்டாவது திருமணம் செய்த வாலிபர் மீது எஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள வாலிபர் குடும்பத்தை  அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு கரையார் தெருவைச் சேர்ந்தவர் யூசுப். கடந்த 2019ம் ஆண்டு இவருக்கும் தௌலத்திற்கும் திருமணம் நடைபெற்றது.  இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளது. முதல் மனைவி தௌலத்தை அடித்து துரத்தி அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.  

இந்நிலையில், உறவினர் பெண்ணை கடந்த 2 மாதத்திற்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் மிகுந்த கோபம் அடைந்த முதல் மனைவி கடந்த வாரம்  திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமாரை சந்தித்து புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, எஸ்பி உத்தரவின் பேரில் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகித்த அண்ணகிரிஸ்டி வழக்கு பதிவு செய்தார்.  முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த யூசுப் மற்றும் உறவினர்கள் சம்சுதீன், சம்சாத், பேகம், சுமதி ஆகிய தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: