மாடியில் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பலி

திருவொற்றியூர்: மண்ணடி, இப்ராஹிம் சாஹிப், 2வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் செல்வகணி (40) என்ற தனியார் நிறுவன ஊழியர்  மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதில், ஒன்றரை வயது குழந்தை ஆசியா, நேற்று வீட்டின் பால்கனி அருகே விளையாடியபோது, எதிர்பாராத வகையில் தவறி கீழே விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு, மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

Related Stories:

More
>