×

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.3.85 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஆண்டுக்கு 1,155 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தும் வகையில், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.3.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையில் கூறியிருப்பதாவது: கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் மூலம், ஆண்டுக்கு 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். இதில், 10 துறைகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்களை கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து 385 வட்டாரங்களிலும் ஒரு வட்டாரத்துக்க 3 மருத்துவ முகாம்கள் வீதம் 385 வட்டாரங்களிலும் மொத்தம் 1,155 மருத்துவ முகாம்கள் நடத்த  உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட உள்ள மருத்துவ முகாம்களில் பின்வரும் சிறப்பு மருத்துவ பரிசோதனை சேவைகள் மக்களுக்கு அளிக்கப்படும்.

மேலும் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு வட்டாரத்தில் 3 முகாம்கள் நடத்துவதற்கு ரூ.1 லட்சம் வீதம் 385 வட்டாரங்களுக்கு ரூ.3.85 கோடி செலவழிக்கப்படும். மருந்துகள் ரூ.75 ஆயிரம், மொத்த முகாம்களுக்கு ரூ.2,88,75,000, எரிபொருள் முகாமிற்கு ஒரு வட்டாரத்திற்கு ரூ.5,500, மொத்தம் ரூ.21,17,500, முகாம் ஏற்பாடுகள், ஒரு வட்டாரத்திற்கு ரூ.6,000 வீதம் மொத்தம் ரூ.23,10,000, தகவல் கல்வி தொடர்பிற்கு ரூ.3,300 வீதம் 385 முகாமிற்கு ரூ.12,70,500, துண்டு பிரசுரம் மற்றும் சிற்றேடுகள் ஒரு வட்டாரத்திற்கு ரூ.3,300 வீதம் 385 முகாமிற்கு ரூ.12,70,500, பதாகைகள் ரூ.8,08,500, படிவங்கள் ரூ.9,24,000, புறநோயாளி சீட்டு ரூ.2400 வீதம் 385 முகாமிற்கு ரூ.9,24,000 என மொத்தம் ரூ.3.85 கோடி ஆகும். அதன்படி ஆண்டுக்கு 1155 சிறப்பு மருத்துவ முகாம்களை மீண்டும் புதுப்பொலிவுடன் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் மூலம் நடத்திட ஆண்டு தோறும் ஆகும் செலவினம் ரூ.3.85 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rs 3.85 crore per annum for the artist's pre-save project: Government of Tamil Nadu Government Release
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...