×

பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது கருணை மனுவில் நிலை குறித்து தகவல் கோரி ஆர்.டி.ஐ.யின் கீழ் அனுப்பிய மனுவை பரிசீலிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மாநில தகவல் ஆணையம் 7-ம் தேதிக்குள் பதில் அளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் 2019-ல் ஆளுநருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் தன்னை விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரை மீது முடிவு எடுக்க ஆளுநருக்கு என்ன தடை உள்ளது. மேலும், பல்வேறு விவரங்கள் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் அலுவலக தகவல் அதிகாரிக்கு பேரறிவாளன் விண்ணப்பித்து இருந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் வராததால் பேரறிவாளன் தனது கருணை மனுவின் நிலை குறித்து தகவல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், தனது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மாநில தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் வரும் 7-ஆம் தேதிக்குள் மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க  உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : State Information Commission ,High Court of ,Chennai , State Information Commission should reply to Perarivalan's mercy petition: Chennai High Court order.!
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...