பொள்ளாச்சியில் 5 மாத பெண் குழந்தை கடத்தல்: சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் விசாரணை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் 5 மாத பெண் குழந்தை அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த மணிகண்டன் - சங்கீதா தம்பதி பழைய துணிகளை வாங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். பொள்ளாச்சி ஆனைமலை முக்கோண பகுதிக்கு வியாபாரத்திற்கு சென்றிருந்த போது இவர்களின் 5 மாத குழந்தை கடத்தப்பட்டுள்ளது. கடத்தல் தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில் அதை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் கடத்தல்காரரை தேடி வருகின்றனர். குழந்தையை கடத்திய நபரை கண்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களை காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories:

More
>