டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக் கொண்டார்!!!

டெல்லி: டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக் கொண்டார். இந்திய விமானப் படையின் தளபதியாக இருந்த ஆர்.கே.எஸ். பதூரியா இன்றுடன் ஓய்வு பெற்றார். இதனால் புதிய தளபதியாக ஏர்மார்‌ஷல் விவேக் ராம் சவுத்திரி நியமிக்கப்பட்டார். இவர் முன்னதாக விமானப் படையின் துணை தளபதியாக பதவி வகித்தார்.

விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா ஓய்வு பெற்றதை அடுத்து, டெல்லியில் இன்று ந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக் கொண்டார். விமானங்களை இயக்குவதில் வல்லவரான இவர், 39 ஆண்டு கால அனுபவம் கொண்டவர். கடந்த 1982ம் ஆண்டு டிசம்பரில், சவுத்ரி இந்திய விமானப் படையில் போர் விமானியாக சேர்ந்தார்.

இந்திய விமானப்படையில் மிக்-21, மிக்-23 எம்எப், மிக் 29, சுகோய் 30 எம்கேஐ உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை இயக்கிய இவர், 3,800 மணி நேரத்துக்கு மேல் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். விமானப் படையின் மேற்கு பிரிவு தளபதியாகவும் இருந்துள்ளார். இவர் பரமவசிஷ்டசேவா விருது, ஆதிவசிஷ்டசேவா விருது, வாயுசேனா விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும், இந்திய விமானப் படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் சந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் பதவி ஓய்வு பெற்ற விமானப் படை தளபதி பதூரியா கடந்த 2019 செப்டம்பர் 9-ந் தேதி தளபதி பொறுப்பை ஏற்றார். 2 ஆண்டுகளுக்குள் அவர் பதவி ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: