×

காங்கிரசில் இருந்து விலக உள்ளேன்..பாஜகவில் இணையும் திட்டம் இல்லை : பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பேட்டி

சண்டிகர் : காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் பஞ்சாப் அடுத்த 5 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் அடுத்தடுத்து உட்கட்சி பூசல் அரங்கேறி வருகின்றன.பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த கேட்பன் அமரீந்தர் சிங்கிற்கும் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ்  மேலிட அழுத்தம் காரணமாக பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் தனது பதவியை கடந்த 18ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார்.

இப்பயணத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து, அமரீந்தர் சிங் பாஜவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இதை மறுத்த அமரீந்தர், டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் இல்லத்தை காலி செய்ய வந்திருப்பதாகவும் பேட்டிகளில் குறிப்பிட்டார். இதனிடையே நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அமரீந்தர் சிங், இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலக இருப்பதாகவும் ஆனால் பாஜகவில் இணையும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Congress ,BJP ,Punjab ,Chief Minister ,Amarinder Singh , அமரீந்தர் சிங்
× RELATED காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை...